Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீமையும் நன்மைக்கே! மூணுகோடி நாள் விரதத்தை ஒரே நாளில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிரகதோஷம் இனி இல்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
03:03

சிவராத்திரி நன்னாளில் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் திருஞானசம்பந்தர் பாடிய இந்த பதிகத்தைப் பக்தியுடன் பாடினால் கிரக தோஷம் நீங்குவதோடு வாழ்வில் எல்லாம் நன்மையாக நடக்கும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசுஅறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு
பதினெட்டொடு ஆறும்,
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகு அலர் கொன்றை திங்கள்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலை அது ஊர்தி,
செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அருநெறி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

மதி நுதல் மங்கையோடு, வட ஆல் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல்அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு துõதர்
கொடுநோய்கள் ஆன பலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

 நஞ்சு அணிகண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும், நங்கள் பரமன்,
துஞ்சு இருள், வன்னி, கொன்றை முடிமேல்
அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும்
மிகையான பூதம் அவையும்,
அஞ்சிடும், நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

வாள் வரி அதள் அது ஆடைவரி கோவணத்தார்
மடவாள் தனோடும் உடன்ஆய்,
நாள் மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்,
கோள் அரி, உழுவையோடு, கொலையானை கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

செப்பு இளமுலை நல்மங்கை ஒரு பாகமாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும் வாதம், மிகையான பித்தும்,
வினையாக வந்து நலியா,
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழி செய்து அன்று, விடை மேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்,
வாள்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை
அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடம் ஆகும்பரன், நாரி பாகன்,
பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
மலர்மிசை யோனும் மாலும்
மறையோடு தேவர்
வருகாலம் ஆன பலவும்
அலைகடல், மேரு நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்,
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

 தேன் அமர் பொழில்கொள் ஆலைவிளை
செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசு ஆள்வர், ஆணை நமதே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar