புதுப்பட்டு சிவன் கோவிலில் சோமேஸ்வரர் திருகல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 12:03
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே சிவன் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு சிவன் கோவிலில் சொர்ணாம்பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருகல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ருத்திர ஹோமம், சுதர்சனம் ஆகியவை வேத விற்பள்ளர்கள் முன்னிலையில் நடந்தன. காலை 10 மணியளவில் சுவாமிக்கு சீர்வரிசையை, ஊர்பொதுமக்கள் ஊர்வலமாக சன்னதிக்கு கொண்டு வந்தனர். காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சுவாமிக்கு அய்யர் ரவி குருக்கள், திருகல்யாணத்தை நடத்தி வைத்தார். கோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தங்கராசு மற்றும் சிவ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.