பதிவு செய்த நாள்
22
ஆக
2011
10:08
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மெக்காவில் இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிக்குமாறு மக்களை வற்புறுத்தி வந்தார்கள். இச்சமயத்தில் அண்ணலாரின் பெரிய தந்தை அவருக்கு பகையாக இருந்தார். ஒருமுறை முஸ்லிம்களுக்கு எதிரான போரில் ஏராளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் நாயகத்தின் பெரிய தந்தையும் ஒருவர். முஸ்லிம்கள் கைதிகளின் கை, கால்களைக் கட்டிப் போட்டனர். பெரிய தந்தையாரும் இறுகக் கட்டப்பட்டார். அப்போது அவருக்கு கடும் நோய் ஏற்பட்டது. கை, கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் நோயின் துன்பம் இன்னும் அதிகமானது. அவரது பரிதாப நிலை கண்டு சகிக்காத, நாயகம்(ஸல்) அவர்களின் தோழர்கள் அவரது கட்டுகளை அவிழ்த்துவிட்டனர்.
இந்த விஷயம் அண்ணலாரின் கவனத்திற்குச் சென்றது.
தோழர்களே! எனது பெரிய தந்தையின் கட்டுகளை நீங்கள் அவிழ்த்தது போல், மற்ற கைதிகளின் கட்டுகளையும் அவிழ்த்து விடுங்கள். அல்லது அவரை மீண்டும் கட்டிப் போடுங்கள். ஆளுக்கொரு நீதி கூடாது. ஒன்று மட்டும் உறுதி. என் புதல்வி பாத்திமா திருடிய போதிலும், அவருடைய கரங்களையும் வெட்டவே கட்டளையிடுவேன், என முழங்கினார்கள். தவறு செய்தவர்கள் உறவுக்காரர்களாக இருந்தாலும், நீதி, நேர்மையைக் கடைபிடித்த நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால், இன்றைய உலகம் எம்மாத்திரம்!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி.