பதிவு செய்த நாள்
02
மார்
2016
05:03
கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிப்., 2ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது. பிப்., 23ம் தேதி கொடியேற்று விழாவும், அக்னிச்சாட்டும் நடந்தது. பிப்., 26ல் திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழா நாட்களில் அன்றாடம், அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (மார்ச்.2) மதியம், 2:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலைத்திடலில், மதியம் 2:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக, தேர்நிலையை அடைந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளையபட்டம் மருதாசல அடிகள், இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.