சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: 13ல் நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2016 11:03
சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா வரும் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக 13-ம் தேதி மாலையில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் இந்த ஆண்டு பங்குனி மாத பூஜையும், உத்திர திருவிழாவும் சேர்ந்து வருகிறது. இதற்காக 13-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 14-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். காலை 7.30-க்கு உஷபூஜை நடைபெறும். காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துக்கான சடங்குகள் நடக்கும். கொடிபட்டத்துக்கு கோயில் முகப்பு மண்டபத்தில் சிறப்புபூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக கோயிலை வலம் வரும்.10.20 முதல் 11 மணிக்குள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தங்க கொடிமரத்தில் கொடியேற்றுவார். விழாவின் எல்லா நாட்களிலும் இரவு ஒன்பது மணிக்கு பூதபலி நிகழ்ச்சி நடைபெறும். 15-ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் 22-ம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் காலை 11.30-க்கு உற்சவபலி நடைபெறும்.22-ம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். 23-ம் தேதி காலை எட்டு மணிக்கு சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்தருளுவார். பகல் ஒரு மணிக்கு பம்பையில் ஆராட்டுக்கு பின்னர் மாலை மூன்று மணிக்கு புறப்படும் பவனி சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.