கடலுார்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் 6ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. சிங்கிரிகுடியில் எழுந்தருளியுள்ள கனகவல்லித் தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் திருத்தேர் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தேர் வரும் 6ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் வெள்ளோட்டம் விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரத்தினாம்பாள், செயல் அலுவலர் கொளஞ்சி ஆகியோர் செய்து வருகின்றனர்.