காரைக்குடி காமாட்சி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து தீமிதித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 02:02
காரைக்குடி: காரைக்குடி காளியப்பா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி கழனிவாசல் காளையப்பா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த பிப்.17ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. நேற்று காலை, வாட்டர் டேங்க் சிவசக்தி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவைக் காவடி, அக்னிச்சட்டி எடுத்தும், வேல் குத்தியும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கோயில் முன்பு, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.