பதிவு செய்த நாள்
07
மார்
2016
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள, ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவிலில், இன்று, மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
பிள்ளையார் பாளையம் பகுதியில், ருத்திரர்கள் எனப்படும், சிவபெரு மான் அன்புக்கு பாத்திரப்பட்டவர்கள் வழிபட்ட தலங்கள் உள்ளன.அவற்றில், ஆனந்த ருத்திரர், மகா ருத்திரர், அனாதி ருத்திரர் போன்ற தலங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையான, ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில் சிறந்து விளங்குகிறது.பிள்ளையார்பாளையம் சேர்மன் சாமிநாதன் தெருவில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஆண்டு தோறும் பிரதோசம், ஆருத்ரா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாட்டை அப்பகுதியை சேர்ந்த, நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி செய்துள்ளார்.