ஜெய்மாருதி கோயிலுக்கு வந்த குரங்கு: பக்தர்கள் மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2011 10:08
திருநெல்வேலி : சுத்தமல்லி விலக்கு ஜெய் மாருதி கோயில் ராஜகோபுர பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகரில் ஜெய் மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் உள்ளடக்கிய ராஜகோபுரத்தில் ஒரு கோடி ராமஜெயம் நாம மந்திரங்கள் காகிதத்தில் எழுதி திருப்பணி செய்து கோபுரம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. அதே போல் ராமஜெயம் என்ற நாமகரணம் முத்திரை பொறிக்கப்பட்ட செங்கல்கள் கொண்டு கோபுரம் எழுப்பப்படுகிறது. இதற்கான பணிகளில் ஜெய்மாருதி தர்மசேவா டிரஸ்ட் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி பக்தர் பேரவை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோயிலுக்கு வந்த மாருதி: கோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து வரும் நிலையில் "குரங்கு ஒன்று திடீரென கோயிலுக்கு வந்தது. ராஜகோபுர திருப்பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் கோயில் வளாகத்தை சுமார் 2 மணிநேரம் குரங்கு சுற்றித்திரிந்தது. கோயிலுக்கு வந்த குரங்கிற்கு பக்தர்கள் பழங்களை கொடுத்தனர். பழங்களை வாங்கி சாப்பிட்ட குரங்கு அதன்பிறகு அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "சுத்தமல்லி விலக்கு பகுதியில் குரங்குகளே கிடையாது. இந்நிலையில் ராஜகோபுரம் திருப்பணி நடைபெறும் கோயிலுக்கு குரங்கு வந்ததை பெரும் பாக்கியமாகவும், ஆஞ்சநேயரின் ஆசி கிடைத்து விட்டதாகவும் பக்தர்கள் குறிப்பிட்டனர்.