பதிவு செய்த நாள்
09
மார்
2016
01:03
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, அங்காளம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த, அகரத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி முடிந்து, அடுத்த அமாவாசையில் திருவிழா நடப்பது வழக்கம். முதலில் கோவில் பூசாரி வெள்ளையன் பம்பையை அடித்தபடி, குண்டம் இறங்கினார். தொடர்ந்து, பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கினர். அவ்வாறு குண்டம் இறங்கியவர்கள், முட்டிக்கால் போட்டுக்கொண்டு, கூர்மையான கத்தியை கையில் ஏந்தியபடி, கோவிலை மூன்றுமுறை வலம் வந்து, அம்மன் முன் இருந்து தீர்த்தகுடம் மீது கத்தியை வைத்ததும், 15 நிமிடம் அசையாமல் நின்றது. தொடர்ந்து பொங்கல் விழாவும், நாளை இரவு மயானகொள்ளை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.
* நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை மயானத்தில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை மற்றும் சக்தி அழைப்பு பூஜை, நடந்தது. நேற்று மாலை, 3 மணிக்கு, காளி வேஷம் போட்டு, ஊர்வலமாக வந்து, மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச், 9) காலை, 9 மணிக்கு முப்பூஜையும், மதியம், 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.