புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது. முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் கடந்த 29ம் தேதி கொடியேற்றுத்துடன் துவக்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை, நேற்று நடந்தது. மாலை 5.00 மணிக்கு பூ விமானத்தில் அம்மன் மயானத்திற்கு எழுந்தருளினார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.