உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோயில்களில் நடந்த மகாசிவராத்திரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். உசிலம்பட்டி ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயில், திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன. இப்பகுதி குலதெய்வக் கோயில்களிலும் இரவு முழுவதும் வழிபாடுகள் நடந்தன. வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.