வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா: மார்ச் 14ல் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2016 12:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்குள் காப்பு கட்டி கொடியேற்றப்படுகிறது. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மார்ச் 23ல் பங்குனி உத்திரத்தன்று பகலில் பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்தும், இரவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மார்ச் 24 இரவு முருகன் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
*மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன் கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 14ல் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து 10 நாள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மார்ச் 23ல் தென் கடற்கரை விநாயகர் கோயில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றிரவு பூக்குழி நிகழ்ச்சி நடக்கிறது. ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில், குயவன்குடி சாது சுப்பையா, இடையர்வலசை முருகன், மண்டபம் காந்தி நகர் சண்முகசடாச்சர வடிவேல் முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர விழா நடக்கிறது.