பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பரங்கிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி கடந்த 4ம் தேதி சக்தி கரகம், அங்காள பரமேஸ்வரி வீதியுலாவும், 5ம் தேதி விருஷபாருட, அர்த்தநாரீஸ்வரியாய் அங்காள பரமேஸ்வரி வீதியுலாவும், 6ம் தேதி சிவலிங்க வழிப்பாட்டுடன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி மகா சிவராத்திரி, இரவு பூங்கரகம் இருளமுகம் வீரபத்தரை பெரியாச்சி வைதீக பூஜை, பல வகை கரக உலாக்களுடன் தேவி ரஷா பிராதான மருத்துவகோல் விழாவும், 8ம் தேதி அமாவாசி நடுப்பகல் சக்தி கரகம், பூங்கரகம், அக்னிகப்பரை, உச்சி கப்பரைகளுடன் கபாலமேந்திய கோல மயான நிர்த்தன விழாவும், 9ம் தேதி பூங்கரம், கரத்திருவிழா நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி சரவணன் செய்திருந் தார்.