பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
கோத்தகிரி கோத்தகிரி கன்னேரிமுக்கு முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கன்னேரிமுக்கு கிராமத்தில், 125 ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் மற்றும் வருடாந்திர திருவிழா நடந்தது. காலை, 6:00 மணிமுதல், 7:00 மணி வரை கோவில் பூசாரி மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிமுதல் ஐயனின் வருடாந்திர விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகளுடன், அருள் வாக்கு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பஜனை, ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கன்னேரிமுக்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஐயனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.