பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை, 6:00 மணி முதல், 9:00 மணிக்குள் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.அதன்பின், மாலை, வாஸ்து சாந்தியும், அங்குரார்பணமும், விநாயகர் வீதியுலாவும் நடந்தது. பின், நேற்று காலை, 10:30 மணிக்கு, கொடியேற்றமும், அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி அலங்காரம் மற்றும் வீதியுலாவும், பின், மாலை, சோமாஸ்கந்தர் சந்திரபிரபை வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.