பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
அவிநாசி: அவிநாசி அருகே சின்னேரிபாளையம் அபிராமி கார்டனில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பரிவார மூர்த்திகளுக்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சின்னேரிபாளையம் ஊராட்சி அபிராமி கார்டனில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இதில், விஷ்ணு துர்க்கை, நவக்கிரஹங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜைகளுக்கு பின், நேற்று காலை, 10.30க்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, அபிராமி கார்டன் குடியிருப்போர் நலச்சங்க கட்டடம் திறக்கப்பட்டது; அபிராமி கார்டன் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிப்போர் பங்கேற்றனர்.