பதிவு செய்த நாள்
15
மார்
2016
10:03
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நேற்று நடந்தன; முதல்கால யாக பூஜை இன்று நடக்கிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 18ல், நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் முளைப்பாரி, தீர்த்த கலச ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை, கணபதி ஹோமம் நடைபெற்றது. கும்ப கலசம் அமைக்கப்பட்டு, மூலிகைகள், திர வியங்கள் மூலம் சிவாச்சார்யார்கள் யாகம் நடத்தினர். பின், ஊர்வலமாக கலசம் எடுத்து வரப்பட்டு, உற்சவர் விநாயகர் மற்றும் மூலவர் ஸ்ரீவிஸ்÷ வஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கலச நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமியிடம் அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, தானியங் கள் தனம் வைத்து, கும்பாபிஷேக யாகம் மற்றும் விழா சிறப்பாக நடக்க, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை, கோவில் வளாகம் முழுவதும், தோஷம் நீக்கும் வகையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவை நடைபெற்றன.
இன்று காலை, 8:35 முதல், 11:35 வரை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், தீர்த்தம், அக்னி அமைக்கும் நிகழ்ச்சி நடக்கும். மாலை, 5:35க்கு, யாக சாலையில் பூர்வாங்க பூஜை, கும்ப அலங்காரம், கட ஸ்தாபனம் மற்றும் முதல்கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை, 9:05 முதல், 11:35 வரை, இரண்டாம் கால யாக பூஜை; மாலை, 5:35 முதல், 8:35 வரை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். வரும், 17 காலை, 8:35 முதல், 11:35 வரை, நான்காம் கால யாக பூஜை; மாலை, 5:05 முதல், 8:35 வரை, ஐந்தாம் கால யாக பூஜை நடக்கும். வரும், 18ம் தேதி காலை, 6:05க்கு, ஆறாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. 9:45க்கு, கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், 10:05க்கு, மூலவர் மற்றும் பரிவார சன்ன தியில் எழுந்தருளும் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், சுப்ரமணியர், சனீஸ்வரன் சன்னதி, பட்டி விநாயகர், ராஜகோபுர பழைய கலசங்கள் அகற்றப்பட்டு, தங்க முலாம் பூசிய, 20 புதிய கலசங்கள் அமைக்கப்பட உள்ளன. நேற்று, புதிய ÷ காபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.