பதிவு செய்த நாள்
15
மார்
2016
10:03
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், ÷ தன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், காலை 6:00க்கு மேல் 7:30 மணிக்குள் மூலவர் முன் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணியளவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். முன்னதாக, கிராம தேவதைகளான செல்லிய ம்மன், அய்யனார் வகையறாக்களுக்கு நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி ஆட்டுக்கிடா, மயில், யானை, குதிரை வாகன ங்களில் சுவாமி வீதியுலா, இரவு கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம் நடக்கிறது. வரும் 22ம் தேதி அதிகாலை 4:30க்கு மேல் 6:00 மணிக்குள் தே÷ ராட்டம், 23ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி, மாலை மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடக்கிறது.