திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2016 11:03
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. முன்னதாக கொடிபட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடினர். அன்னதானம் நடந்தது. மார்ச்., 24 வரை தொடர்ந்து மண்டகப்படி பூஜை முறைகள் நடக்கிறது. திவான் மகேந்திரன், சரக செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.