விழுப்புரம்: கருங்காலிப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானகொள்ளை விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 14ம் ஆண்டு மயானகொள்ளை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, கத்திமேல் நின்று அருள் வாக்கு அளிக்கும் நிகழ்ச்சி நடந் தது. இரவு 9:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. இதில், கோவில் பூசாரி பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.