சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர்கோவில் வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டிய நாயகம் கோவிலில் சுப்ரமணியர் சுவாமி பங்குனி உத்திரம் கொடியேற்றம் நடந்தது. இதனையொட்டி வள்ளி தேவசேனை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி வீயுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி தேரோட்டமும், 23ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி சிவகங்கை குளத்தில் தீர்த்தாவாரியும் நடக்கிறது.