விருத்தாசலம்: திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாண பிரம்மோற்சவம், விருத்தாசலத்தில் வரும் 26ம் தேதி நடக்கிறது. இது குறித்து சீனிவாசப் பெருமாள் ஆன்மிக அறக்கட்டளை தலைவர் ராமதாஸ், கூறியதாவது: சீனிவாசப் பெருமாள் ஆன்மிக மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் விருத்தாசலத்தில் வரும் 26ம் தேதி மாலை 4:00 மணியளவில் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண பிரம்÷ மாற்சவம் நடக்கிறது. இதற்காக, திருமலை திருப்பதியிலிருந்து பத்மாவதி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் சுவாமிகள் திருமலை திருப்பதி ÷ தவஸ்தான நிர்வாகம் மூலம் விருத்தாசலம் கொண்டு வரப்படுகிறது. விருத்தாசலம் – சேலம் புறவழிச்சாலை, ராணி மஹால் எதிரில் திருக்கல்யாண பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெறும் என்றார். தொடர்ந்து விழா கமிட்டி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அற ங்காவலர் அகர்சந்த், அறக்கட்டளை துணைத் தலைவர் ஜெயசங்கர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.