திருப்பதி : திருமலைக்கு கோடை விடுமுறையின்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோடைக்கால சிறப்பு முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இதன்படி அடுத்த 6 மாதத்திற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பக்தர்கள் நடந்து செல்லும் மாட வீதியில் குளிர்ந்த நீர் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோடைக்கால விடுமுறை முடியும் வரை தேவஸ்தான ஊழியர்களும், அதிகாரிகளும் விடுப்பு எடுக்க தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.