பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
கரூர்: தான்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோவிலில், வரும், ஏப்ரல், 5ம் தேதி பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. கரூர் அடுத்த, தான்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா உற்சவம், வரும், 27ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 28ம் தேதி மாரியம்மனுக்கு அபிஷேகம், இரவு சிம்ம வாகன மண்டகப்படி, 29ம் தேதி அன்ன வாகனம், 30ம் தேதி சர்ப்ப வாகனம், 31ம் தேத யானை வாகனம் உற்சவம் நடக்கிறது. ஏப்., 1ம் தேதி, பூச்சொரிதல் விழா, வேப்பமர வாகனம், 2ம் தேதி புலி வாகனம், 3ம் தேதி குதிரை வாகனம், இரவு பகவதியம்மனுக்கு அமராவதி ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல், 4ம் தேதி மாரியம்மன் ஸ்வாமி ரதமேருதல், திருத்தேர், மாலை வண்டிக்கால் பார்த்தல், சந்தனகாப்பு, பூக்குழி திறப்பு நடக்கிறது. மேலும், 5ம் தேதி காலை அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி, அலகு அழைத்து வந்து பூக்குழி இறங்குதல், 6ம் தேதி அபி?ஷகம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், 7ம் தேதி காலை, மாவிளககு, 5 மணிக்கு மாரியம்மன் கம்பம், கரகம் ஆற்றுக்கு கொண்டு விடுதல், இரவு வாண வேடிக்கை நடக்கிறது.