காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கோவிலூரில், பழமை வாய்ந்த குந்திதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட, இரு தேர்களில் குந்திதேவி, திரவுபதியம்மன், பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு, எட்டு நாட்கள் தேரில் உலா வந்து, அப்பகுதி மக்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். தற்போது துவங்கியுள்ள தேரோட்டத்தால், விரைவில் கோடை மழை பெய்யும் என, இப்பகுதி பக்தர்கள் தெரிவித்தனர்.