புதுச்சேரி: சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி முதல் தினமும் காலை 9 மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடக்கிறது. விழாவின் 9ம் நாளான நேற்று இரவு அம்மன் நந்தி வாகனத் தில் வீதி உலா நடந்தது.இன்று 16ம் தேதி மதியம் வேதபுரீஸ்வரர் கோவிலில் குளத்தில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 22ம் தேதி இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்போற்சவம், 23ம் தேதி இரவு 7மணிக்கு ஊஞ்சல் உற்வசம், 24ம் தேதி மகா அபிஷேகம், 25ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.