நிஷ்காமப் பிரார்த்தனை என்று ஒரு சொற்பிரயோகம் இல்லை. ஆனால் அப்படிச் சொல்வதில் தவறு இல்லை. உலக சுகங்களை நாடும் இலௌகிக ÷ நாக்கத்தில் இறைவனிடம் செய்யப்படும் பிரார்த்தனைகள். காமியப்பிரார்த்தனைகள் ஆகும். இதற்கு நேர்மாறானது நிஷ்காம பிரார்த்தனை, சுய தூ ய்மையைப் பெறுவதற்கு நிஷ்காமப் பிரார்த்தனை மிகவும் நல்ல ஒரு வழியாகும். தூய பக்தி, மனத்தூய்மை போன்றவற்றை இறைவனிடம் ÷ வண்டிப் பிரார்த்தனை செய்வது நிஷ்காமப் பிரார்த்தனை ஆகும். சுருக்கமாகச் சொன்னால், நமது ஆன்மநலனை மேம்படுத்தக்கூடிய ஆன்மாவை உயர்த்தக் கூடிய பிரார்த்தனைகள் நிஷ்காமப் பிரார்த்தனைகள் ஆகும்.