எல்லையற்ற இறைவனின் எல்லையற்ற கருணையைத் திருவருள் என்கிறோம். மேலும் தெய்வ சங்கல்பம், தெய்வ சம்மதம், இறைவன் உயிர்கள் மீது கொள்ளும் கருணை, எல்லாம் வல்ல ஆற்றல் போன்ற பொருள்களிலும் திருவருள் என்ற சொல் வழங்கப் பெறுகிறது. ஞானம் இரண்டு வகை ப்படும். அவற்றை முறையே பரஞானம், அபரஞானம் என்று சொல்வார்கள். இவற்றில் பரஞானம் என்பது இறைவனின் திருவருள் என்று சைவசமயம் கூறுகிறது.