அஷ்டபந்தனம் என்றால், எட்டு மருந்துகளின் சேர்க்கை என்று பொருள். இந்த மருந்துகளைக் குறிப்பிட்ட சில மந்திரங்களைக் கூறி ஒன்றாகச் சேர் ப்பார்கள். அஷ்டபந்தனம் என்பதில் இடம் பெற்றுள்ள எட்டு மருந்துகளின் பெயர் வருமாறு - 1. கல்காவிப்பொடி, 2. சுக்கான் பொடி, 3. குங்கிலிய ம், 4. செம்பஞ்சு, 5. கொம்பரக்கு, 6. ஜாதிலிங்கம், 7. வெள்ளைமெழுகு, 8. எருமை வெண்ணெய். மேற்கூறிய கலவையை, சுவாமி விக்கிரகம் இப் படியும் அப்படியும் அசையாமல் ஸ்திரமாக இருக்கும் பொருட்டு, பீடத்தின் அடியில் சாத்துவார்கள்.