பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, 19ம் தேதி முதல் தொடர்ந்து, ஐந்து நாட்கள், தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருமலை தேவஸ்தானத்தில், நாளை முதல், 23ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. தினமும், மாலையில், ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள உற்சவ மூர்த்திகள், தெப்பத்தில் வலம் வர உள்ளனர்.அதற்காக, திருமலையில் உள்ள, ஸ்ரீவாரி திருக்குளத்தை துாய்மைப்படுத்தி, அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குளத்தின் நடுவே, இரண்டடுக்கு கொண்ட மிக பிரமாண்டமான தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழா காரணமாக, ஐந்து நாட்களுக்கும் பல ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.