பதிவு செய்த நாள்
18
மார்
2016
12:03
திருப்பூர் :திருப்பூரில் பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், இன்று காலை, 9:35 முதல், 10:15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது; லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பின், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் ÷மற்கொள்ளப்பட்டு, இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைöறுகிறது. கடந்த, 13ல் முளைப்பாரி, தீர்த்த கலசம் மற்றும், 63 நாயன்மார் ஊர்வலத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களுடன், யாக சாலையில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.நேற்று காலை, 8:35 முதல், 11:35 வரை, நான்காம் கால யாக பூஜை நடந்தது; மாலை, 5:05 முதல் 8:35 வரை, ஐந்தாம் கால யாக பூஜைகளை, சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். யாக சாலை கலசங்களில் எழுந்தருளியுள்ள
சுவாமிகளுக்கு, யாக குண்டங்களில், மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு உள்ளிட்டவற்றை இட்டு, 38 யாக குண்டங்களில், சிவாச்சார்யார்கள் வேள்வி நடத்தினர். தொடர்ந்து, 63 நாயன்மார்கள், பரிவார சுவாமிகளுக்கு மருந்து சாத்துதல் மற்றும் மூலவர், அம்பாள், சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார சன்னதி கோபுரங்களில், கலசம் பொருத்தும் பணிகள் நடந்தன. இன்று காலை, 6:05க்கு, ஆறாம் கால யாக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, பிம்ப சுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் மற்றும் நிறைவேள்வி நடக்கிறது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, 9;45க்கு, மூலாலய விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி கோபுரங்களுக்கு, புனிய நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை, 10:05க்கு, ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சியம்மன், ஸ்ரீசுப்ரமணியர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு, மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, மகா அபிஷேகம்; இரவு, 7:00க்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, சுவாமி வீதி உலா ஆகியன நடக்கிறது.புனித நீர் தெளிக்க7 இடங்களில் "ஸ்பிரிங்லர்இந்து சமய றநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன், சிவராமசூரியன், திருப்பணிக்குழு சிவராம் ஆகியோர் கூறியதாவது:கும்பாபிஷேகத்தை காண வரும்
பக்தர்களுக்காக, ராஜகோபுரம் முன்புள்ள ரோடு மற்றும் தெற்கு வாசல் ரோடு அனுமதிக்கப்பட்டு, அங்கு பெட்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. நெரிசலின்றி பக்தர்கள் காத்திருந்து, கோபுர தரிசனம் செய்யலாம். கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் மீது தெளிக்கும் வகையில், கோவில் வீதிகள் மட்டுமன்றி, மிஷன் வீதி, பெருமாள் கோவில் வீதி என, ஏழு இடங்களில் "ஸ்பிரிங்லர் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு இடங்களில், "எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அன்னதானம்: லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தி திருமண மண்டபம், கஸ்தூரி ஜின்னிங் பேக்டரி வளாகம், சிவசுப்ரமணியம் செட்டியார் வீதி, கஜலட்சுமி தியேட்டர் வீதி, கந்தசாமி செட்டியார் வீதிகளில், அன்னதான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் வடபுறம் உள்ள அறிவொளி ரோடு வழியாக, குஜராத்தி திருமண மண்டபத்துக்கும்; பெருமாள் கோவில் சொர்க்கவாசல் எதிர்புறம், பூ மார்க்கெட் வழியாக, அன்னதானம் நடக்கும் இடத்துக்கும் செல்ல, வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்துமிடம்: கார் "பார்க்கிங் செய்வதற்கு, நொய்யல் ஆற்றின் இருபுறமும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வளம் ரோடு, சக்தி தியேட்டர் ரோடு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள நொய்யல் கரை ரோடுகளில், கார்கள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நந்தவன தோட்டம் மற்றும் டைமன்ட் தியேட்டர், கே.ஆர்.சி., சிட்டி சென்டர் வளாகங்களும், வாகன "பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், கஜலட்சுமி தியேட்டர் முதல் ஈஸ்வரன் கோவில் பாலம் வரை; அரிசிக்கடை வீதி, பெருமாள் கோவில் வீதி, பெரிய கடை வீதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில், 400 போலீசார் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோடுகள், அன்னதான வழித்தடம் மற்றும் கோவில் வளாகத்தில், 30 "சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோவில் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.