சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம், 23ம் தேதி நடக்கிறது. சென்னிமலை முருகன் கோவிலில், இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம், 20ம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாள் கொடியேற்றம், 22ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. 23ம் தேதி காலை, 6 மணிக்கு மேல், 7 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்று மாலை, 5 மணிக்கு தேர் நிலை சேரும். மறுநாள் பரிவேட்டை மற்றும் தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. மகா தரிசனம், 25ம் தேதி காலை, 8 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு, 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.