குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த மாதம் நடந்தது. தேரோட்டம் முடிந்து, 20 நாட்களுக்கு மேலாகியும் தேர் மூடப்படாமல் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக தேர் மூடப்படாமல் இருந்தால் மரத்தினலான தேர் சேதமடைய வாய்ப்புள்ளது. பக்தர்களின் நீண்ட கோரிக்கைக்கு பின், 21 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, 2015 முதல் தேரோட்டம் நடந்து வருகிறது. புதிய தேரை பாதுகாக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்து மூடிவைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.