பதிவு செய்த நாள்
19
மார்
2016
01:03
சென்னை: சுண்ணாம்பு கொளத்துார் சிவா விஷ்ணு கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
சென்னை, கோவிலம்பாக்கம் அடுத்த சுண்ணாம்பு கொளத்துாரில் உள்ள, 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவா விஷ்ணு கோவிலில், பல ஆண்டுகள் புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. கடந்த, 2008ம் ஆண்டு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு, 4.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புனரமைப்பு பணியின்போது மரகத லிங்கம், மகாவிஷ்ணு சிலை கிடைத்தன. அவற்றுடன், மரகதாம்பிகை, வள்ளி, தெய்வானையுடன் முருகர், நந்தீசுவரர், பைரவர், நவகிரகம், சண்டிகேஸ்வரர், ரத்தின கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. மார்ச்18ல், கோவில் நுாதன ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான, மார்ச்18ல், காலை, நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி நடந்தது. அதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்து, விமான கலசங்களை சென்றடைந்தது. காலை 9.40 மணிக்கு, கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது.