திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பக்தர்கள், 14 கி.மீ தூரம் கிரிவலம் வந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசித்து வழிபட்டு செல்வர். நாளை, (22ம் தேதி) மாலை, 4.13 மணிக்கு துவங்கி, மறுநாள் மாலை, 5.55 வரை பவுர்ணமியாகும். இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி, தங்க கொடி மரம் எதிரில் உள்ள அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.