கரூர்: கரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கோம்புபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனிநாதபுரத்தில் உள்ள முனீஸ்வரசாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. முனீஸ்வரசாமி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முனீஸ்வரசாமி, கன்னிமார்சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், மஹா தீபாராதனை நடந்தது. இதில், பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.