மூணாறு கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 12:03
மூணாறு: மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பழநி கோயிலை பின்பற்றி பூஜை உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்து வருகின்றன. இங்கு கார்த்திகை, தைப்பூசம்,பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடந்தப் படுகின்றன. மார்ச் 23ல் பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கோயிலின் இரண்டு தேர்கள் கலை நயத்துடன் புதுப்பிக்கும் பணி நடந்து வருகின்றது. முதன்முறை: திருவிழாக்களின்போது, பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு, முருகன்,வள்ளி,தெய்வானைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். மூணாறைச் சேர்ந்த சண்முகநாதன் தலைமையிலான பழநி பாத யாத்திரைக் குழுவினர் 160 பேர் பங்குனி உத்திரத்தன்று, முதன்முறையாக அஷ்ட லட்சுமி குடத்தில் தீர்த்தக் காவடி எடுக்கின்றனர். இந்த தீர்த்தம் கொண்டு, சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் நடக்கிறது.அதன்பின் இக்குழு சார்பில் கோயிலில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.