பதிவு செய்த நாள்
21
மார்
2016
12:03
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறை முன்னிட்டு, அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் வழிபாடு நடத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த, 27ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து, சுவாமி முன் நீண்ட நேரம் நின்று, சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றார். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்படும். நாமக்கல் மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட பக்தர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வர். இந்நிலையில், நேற்று பங்குனி முதல் ஞாயிறை முன்னிட்டு, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம், தன் குடும்பத்துடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து, சுவாமியை பயபக்தியுடன் வழிபாட்டார். அனைத்து அபி?ஷகமும் முடிந்த பின், புறப்பட்டுச் சென்றார். அப்போது அவருக்கு, எலுமிச்சை, துளசியும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டது, மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.