பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க 250 டன் மலை வாழைப்பழங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2016 11:03
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து 250 டன் மலை வாழைப்பழங்கள் பழநியில் குவிந்துள்ளது.இவ்வாண்டு மைசூர் குடகுமலை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைப்பழங்கள் 250 டன் வந்து குவிந்துள்ளன. இவ்வாண்டு வரத்து அதிகம் உள்ளதால் விலை குறைந்துள்ளது. அதாவது கடந்தாண்டு குடகுமலை ஒரு பழம் ரூ.6 வரையும், சிறுமலை ஒருபழம் ரூ.8வரை விற்கப்பட்டது. தற்போது குடகு ரூ.5 வரையும், சிறுமலை ரூ.6 என விற்கப்படுகிறது. 20 முதல் 100பேர் வரை குழுக்களாக வரும் பக்தர்கள் வாழைப் பழங்களை மொத்தமாக வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.வியாபாரிகள் யுவராஜா, முருகவேல் கூறுகையில்,” இவ்வாண்டு வாழைப்பழம் வரத்து அதிகமாக உள்ளதால் குடகுமலை வாழை மட்டும் 15 லட்சம் காய்கள் வந்துள்ளன. சிறுமலை வாழை என 10 லட்சம் காய்கள் இறக்குமதியாகியுள்ளது. பழத்தின் விலை குறைந்துள்ளதால் கடந்தாண்டை காட்டிலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.