Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் ... பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க  250 டன் மலை வாழைப்பழங்கள்! பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க 250 டன் மலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கௌர பூர்ணிமா விழா!
எழுத்தின் அளவு:
இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கௌர பூர்ணிமா விழா!

பதிவு செய்த நாள்

22 மார்
2016
11:03

மதுரை: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாட்களில் ஒன்றான ஸ்ரீகௌர பூர்ணிமா விழா மார்ச் 23ம் தேதி புதன் கிழமை அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மதுரையில் இவ்விழா மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விசேஷமாக நடைபெற உள்ளது. சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு எனும் திருநாமத்தில் பக்தராக அவதரித்தார். இந்த அவதாரத் திருநாளே கௌர பூர்ணிமா என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நன்னாள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படுகிறது.

கௌர என்றால் பொன்னிறம் என்று பொருள். இந்த சைதன்ய அவதாரத்தில் கிருஷ்ணர், உருக்கிய தங்க நிறத்தில் அவதரித்ததால், கௌராங்கர் என்றும் கௌர என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பங்குனி மாதம் பவுர்ணமி அன்று இந்த அவதாரம் ஏற்பட்டதால் பூர்ணிமா என்ற வார்த்தையும் சேர்ந்து கௌர பூர்ணிமா என்று இவ்விழா சிறப்புடன் அழைக்கப்படுகிறது. அன்று முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து, ஹரே கிருஷ்ண ஜபம் செய்து ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை சிறப்புடன் வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள், இஸ்கான் கோயிலில் அன்று மாலை 6 மணி முதல் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், ஹரிநாம சங்கீர்த்தனம், சைதன்யரின் அவதாரச் சிறப்புரை, விசேஷ கௌர ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் ஸ்ரீசைதன்யர் எடுத்து வழங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை, தினசரி ஜபிப்பதற்காக ஜபமாலைகளும், அவரது அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களும் குறைந்த நன்கொடையில் வழங்கப்பட உள்ளது. தவிர, விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அன்று மாலை நடைபெறும் மஹா அபிஷேகத்திற்கு பின் அபிஷேக தீர்த்தம் வழங்கப்படுகிறது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் முக்கிய உபதேசம்: “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே” எனும் 16 வார்த்தைகளடங்கிய ‘ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை’ தினசரி உச்சரிப்பதே ஸ்ரீசைதன்ய மஹாபிரபு கற்பித்த மிக முக்கிய உபதேசமாகும். இந்த மஹாமந்திரத்தை உச்சரிக்கும் ஒருவர் எல்லா விதமான வெற்றியையும் பெற முடியும் என்று ஸ்ரீசைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். இதனைப் பின்பற்றியே 1966ல் ஸ்ரீலபிரபுபாதா அவர்கள், இஸ்கானை நிறுவினார். இன்று உலகம் முழுவதும் இஸ்கான், ஹரே கிருஷ்ண மஹாமந்திர பயிற்சியை மக்களுக்கு பயிற்றுவிக்கிறது. ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஏராளமான மக்கள் இந்த மஹாமந்திரத்தை உச்சரித்து மன அமைதியும், மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

2016ம் ஆண்டு இஸ்கான் பொன் விழா ஆண்டாகும். 1966ல் துவக்கப்பட்ட இஸ்கான், 50 ஆண்டு காலமாக ஆன்மீக சேவை ஆற்றி வருகிறது. இஸ்கான் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு, இந்த கௌர பூர்ணிமா விழா உலகம் முழுவதும் சிறப்புடன் கொண்டாப்படுகிறது.

பகவானே பக்தராக வந்த அவதாரம்:சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும். அதாவது கிருஷ்ண பக்தர் ஒருவர் எவ்வாறு அவரது நாமத்தை ஜபிக்க வேண்டும் எவ்வாறு பக்தி நெறியுடன் வாழ வேண்டும் என்பதை இந்த அவதாரத்தின் மூலம் உணர்த்தினார். பொன்னிறத்தில் அவதரித்ததால் ஸ்ரீகௌரங்கர் என்றும் அழைக்கப்பட்டார்.

மார்ச்: 23 (புதன்) மாலை: 6.30-6.45க்குள் கௌர பூர்ணிமா விழா
ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவதார திருநாள்-மார்ச் 23 புதன்


ஸ்ரீசைதன்ய மஹாபிரபு மேற்கு வங்காளத்தில் உள்ள நவ தீவுகளில் ஒன்றான ‘மாயாப்பூர்’ எனும் புண்ணிய ஸ்தலத்தில் பவுர்ணமியன்று அவதரித்தார். கௌர் என்றால் பொன்னிற மேனியுடைய ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவையும், பூர்ணிமா என்றால் அவர் அவதரித்த பவுர்ணமி நாளையும் குறிக்கிறது. எனவே ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் அவதாரத் திருநாள் ‘கௌர் பூர்ணிமா’ என்ற பெயரில்
கொண்டாடப்படுகிறது.

சாஸ்திரங்கள்: இவருடைய அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம், முண்டக உபநிஷத், சைதன்ய உபநிஷத், தேவி புராணம், கருட புராணம், பத்ம புராணம் மற்றும் நாரத புராணம் உள்ளிட்ட ஏராளமான வேத சாஸ்திரங்களில் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக பக்தர் வடிவில் அவதரித்து ஹரி நாம சங்கீர்த்தனத்தை எடுத்துரைப்பார் என்று முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ளது. முண்டக உபநிஷத்தில், சுயார் ஒருவர் தங்க நிறம் வாய்ந்த முழு முதற் கடவுளை தரிசிக்கிறாரோ அவர் முக்தி பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர ஸ்ரீமத் பாகவதத்தில், “கலியுகத்தில் புத்திசாலியான மக்கள், ஹரிநாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு எப்பொழுதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை பாடும் முழுமுதற்கடவுளின் அவதாரத்தை, ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை போற்றி வழிபடுவார்கள் என்றும், அவரது நிறம் கருநீலமாக இல்லாவிடினும் அவர் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார் என்றும், அவர் எப்போதும் தனது சகாக்கள் மற்றும் பக்தர் குழுவுடன் இருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவதாரத்தில் பகவான் வழங்கிய உபதேசம்: “யார் ஒருவர் பகவானின் திருப்பெயருக்கு சரணடைகிறாரோ, அதாவது “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிக்கிறாரோ அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடு படுகிறார். தொடர்ந்து உச்சரிப்பவர் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து மனித வாழ்வின் இறுதி நோக்கமான பகவானின் திருஸ்தலத்தினை அடைவர். இம் மஹா மந்திரத்தை உச்சரிக்க எந்த விதமான, கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் - இதுவே மக்களை நல்வழிப்படுத்த இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காட்டிய நல்வழியாகும். இதனை ஹரேகிருஷ்ண மஹாமந்திர ஜப யோகம் அல்லது ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுண்டு.

தென்னிந்திய விஜயம்: ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஆறு வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் முக்கியத்துவத்தை கிராம, நகரங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் எடுத்துரைத்தார். இவரது தென்னிந்திய விஜயத்தை நினைவுபடுத்தும் வண்ணம் திருச்சி-ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே இவரது பாதுகை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தவிர மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கும், திருநெல்வேலி நவதிருப்பதி போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் இவர் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கருணை: ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் பூரண கருணையை பெற விரும்பும் ஒருவர் சுஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை குறைந்த பட்சம் 108 முறை தினசரி உச்சரிக்க வேண்டும். முடிந்தளவு மற்றவர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.

கௌர் பூர்ணிமா விழா கொண்டாடும் விதம்: ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாள் எப்படி கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறதோ, அதே போல் ஸ்ரீகிருஷ்ணரின் பக்த அவதார மான ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருநாள் “கௌர் பூர்ணிமா” வாக கொண்டாட வேண்டும். கௌர் பூர்ணிமா நாளில் சந்திரோதயம் வரை விரதம் இருந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பிறகு அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை உட்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ண கோயில்களில் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருவிக்ரஹங்களுக்கு மஹா அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

மதுரையில் இவ்விழா: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் இவ்விழா மார்ச் 23 மாலை 6 மணிக்கு துவங்கி அபிஷேக, ஹரிநாம சங்கீர்த்தனம், சைதன்ய கதா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ணர், பக்தராக அவதரித்த இந்த நன்னாளை கௌர் பூர்ணிமாவை மக்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டாடி பகவானின் முழுத் திருவருளையும் பெறலாம்.

இஸ்கான், மதுரை. போன்: 0452-2346472

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar