மேட்டுப்பாளையத்தில் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2016 04:03
கோவை: மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 08ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கிய குண்டம் திருவிழாவில் கம்பம் நடுதல்,கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4.00 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைத்து வரபட்டு குண்டம் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தலைமை பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கி தொடங்கி வைக்க, பின் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.