சோமாஸ்கந்தர் என்பது சிவனும் பார்வதியும் குழந்தை முருகனைக் கொஞ்சி மகிழும் கோலமாகும். ஞானபண்டிதனான முருகன் ஒருமுறை தன் தந்தை சிவபெருமானின் கழுத்தில் கரிய நிறத்தில் ஏதோ இருந்ததைக் கண்டார். அதை பார்க்க நாவல்கனி போல இருந்தது. அதைக் கேட்டு முருகன் அடம் பிடித்தார்.சிவன் தன் கழுத்தில் இருப்பது விஷம் என்று எடுத்துச் சொல்லியும் முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தைப் பிடித்திழுக்க முயற்சித்தார். சிவனோ முருகனின் குறும்புத்தனத்தால் மூச்சுத் திணற ஆரம்பித்தார். இந்த இக்கட்டான நிலையில் இருந்து சிவனைக் காப்பாற்ற பார்வதி, குழந்தை முருகனை தன் மடியில் அமர்த்தி பால் ஊட்டினாள். முருகன் சமாதானம் அடைந்து தாயின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்தார். இப்படி பெற்றோருடன் முருகன் இருக்கும் கோலமே சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சோமன் என்றால் சந்திரனை அணிந்த சிவன். அவருடன் முருகன் இருப்பதால் சோமாஸ்கந்தர் என்றானது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சோமாஸ்கந்தரின் அரிய வடிவத்தை தரிசிக்கலாம்.