Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் கோவிலில் சுருட்டு நைவேத்யம்! சோமாஸ்கந்தர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐயப்பன் அரவணை சுவையான செய்தி தெரியுமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
05:03

நீங்கள் பலமுறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்திருப்பீர்கள். வரும்போது எல்லாரும் வரிசையில் நின்று வாங்கும் பிரசாதம் அரவணை. இது பாயாசம் போல இருக்கும். இதற்கு அரவணை என்று பெயர் வர என்ன காரணம் தெரியுமா?

தாருகாவனம் என்ற இடத்தில் வசித்த தவமுனிவர்கள், தாங்கள் செய்யும் யாகத்தில் இருந்து பெறும் ஆகுதியை (ஹோமகுண்டத்தில் போடும் பொருள்)கொண்டு தான் சிவ, விஷ்ணு மற்றும் தேவர்கள் உயிர் வாழ்வதாக கருதினர். இதனால் தெய்வங்களை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று இறுமாப்பு கொண்டனர். இவர்களது ஆணவத்தை அடக்க சிவனும், விஷ்ணுவும் முடிவெடுத்தனர். சிவனே முழுமுதல் தெய்வம், விஷ்ணுவே உலகைக் காக்கும் தொழில் செய்பவர் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினர். சிவன் அழகான வடிவம் எடுத்தும், விஷ்ணு பெண்ணாக மாறி மோகினி என்ற பெயருடனும் வனத்துக்கு வந்தார். அழகான சிவனைக் கண்ட முனிவர்களின் மனைவியருக்கு மனம் மயங்கியது. அவர்கள் சிவன் பின்னால் சென்றனர். முனிவர்களோ விஷ்ணுவின் மாயக்கோலத்தை அறியாமல், மோகினியாக வடிவெடுத்து வந்த அவர் பின்னால் சென்றனர். ஒருவழியாக சுதாரித்து, தங்கள் துணைவியரைக் காப்பாற்றுவதற்காக சிவனை சரணடைந்தனர். சிவனும் அவர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்பின், உலக நன்மை கருதி சிவனும், விஷ்ணுவான மோகினியும் இணைந்து பெற்ற குழந்தையே சாஸ்தா. இவரை தமிழில் சாத்தன் என்பர். சாத்தன் என்றால் கூட்டமாக வந்து வணங்கப்படும் தெய்வம் என்று பொருள். சாஸ்தா பிறந்ததே காட்டில் தான். அவர் குழந்தைப் பருவம் முதல் வானப்பிரஸ்தம் எனப்படும் தவவாழ்வுக்கு சென்ற காலம் வரை காட்டிலேயே பொழுதைக் கழித்தார்.

சாதாரண மனிதர்கள் தனித்து காட்டுக்குச் செல்வது என்பது மிகவும் கடினம். எனவே கூட்டமாக சேர்ந்து காட்டிற்கு சென்று சாஸ்தாவை தரிசித்தனர். சாஸ்தாவின் ஒரு அவதாரமே ஐயப்பன். அவரை வணங்க இன்றுவரை கூட்டமாகத் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். சாஸ்தா கோவில்கள் நதிக்கரை ஓரமாக உள்ளதும் ஒரு சிறப்பு. சபரிமலை சாஸ்தா பம்பை நதிக்கரை ஓரத்திலும், ஆரியங்காவு சாஸ்தா கருப்பா நதிக்கரை ஓரத்திலும், பாபநாசம் சொரிமுத்தைய்யனார் தாமிரபரணி கரை ஓரத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் குளக்கரைகளில் இவரைக் காணலாம். சபரிமலை சாஸ்தா கோவிலில் அரவணை என்ற பாயாச பிரசாதம் வழங்கப்படுகிறது. அரவு என்றால் பாம்பு. அணை என்றால் படுக்கை. சிவனின் கழுத்தில் இருப்பது பாம்பு. அதுவே திருமாலுக்கு படுக்கையாக ஆதிசேஷன் என்ற பெயரில் இருக்கிறது. சிவவிஷ்ணு கூட்டணியில் அவதரித்ததாலோ என்னவோ, சாஸ்தாவின் பிரசாதத்துக்கு கூட அந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்கள். புராணக்கதை ஒன்றும் சாஸ்தாவுக்கு பிரியமான நைவேத்யம் பாயாசம் என்று சொல்கிறது. தசரதருக்கு குழந்தைகள் இல்லாத சமயத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாக குண்டத்தில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது.

பூதம் என்ற சொல் சாஸ்தாவுடன் தொடர்புடையது. அவருக்கு பூதநாதன், பூதத்தான் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தன் குழந்தையான பூதநாதன் மூலம் திருமால் பூலோகத்தில் அவதரிக்க முடிவு செய்தார். வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் 11-16ம் ஸ்லோகங்களின் பொருள்படி, ஒப்பில்லாத ஒளியையுடைய, மகாவீர்யம் பொருந்திய, அழகான ஆபரணங்களால் அழகு செய்யப்பட்ட பூதம் தோன்றியது என்று சொல்லப்பட்டுள்ளது. ஒப்பில்லாத ஒளியையே மகரஜோதி என்கிறோம். அவர் பெரும் சக்தி மிக்கவர். அவருக்கு இன்றும் திருவாபரணம் அணிந்து மண்டலபூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீஅரிகர புத்ர சகஸ்ரநாமம், ஸ்ரீ மகா சாஸ்த்ரு த்ரீசதி, அஷ்டோத்தர சதம் ஆகியவற்றிலும் ஒளிபொருந்தியவர், மகாசக்தி மிக்கவர், ஆபரணம் அணிந்தவர் உள்ளிட்ட வார்த்தைகள் வருகின்றன. பூதநாதனான சாஸ்தா கொண்டு வந்த மாணிக்கப் பாத்திரத்தில் இருந்த பாயாசத்தைக் குடித்த கோசலை ராமனையும், கைகேயி பரதனையும், இரு பங்கு பாயாசம் குடித்த சுமித்திரை லட்சுமணன் மற்றும் சத்ருக்கனனையும் ஈன்றெடுத்தனர். சாஸ்தா அவதரித்த நாள் பங்குனி உத்திரம். அவர் கொண்டு வந்த பாயாசப் பாத்திரத்தின் மூலம் பிறந்த ராமசகோதரர்கள் திருமணம் முடித்ததும் பங்குனி உத்திரத்தன்று தான். ராமன் சீதையையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் திருமணம் செய்தனர். இந்தப் பெண்கள் எல்லாருமே ஜனகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆக, குழந்தை வரம் வேண்டுவோர் சாஸ்தாவை நம்பிக்கையுடன் வணங்கலாம். அவருக்கு சரஸ்வதியின் அம்சமான பிரபா என்ற மனைவியும், சத்யகன் என்ற மகன் இருந்ததாகவும் சில்பரத்தினம் என்ற நுõலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. குழந்தை வரம் தரும் இந்த சாஸ்தாவை சம்மோஹன சாஸ்தா என்பர். பங்குனி உத்திரத்தன்று சாஸ்தாவை வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar