கோவை : ராமநாதபுரத்திலுள்ள கிருஷ்ணசாமி - கங்கா நகரிலுள்ள சிவ, விஷ்ணு ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. மயிலாடுதுறை சித்தமல்லி ஸ்ரீராம் பட்டாச்சாரியர், சிவயாக சாம்ராட் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியர் ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது. 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விசேஷ திரவ்ய ஹோமம், விநாயகர் யாகம் நடந்தது. தொடர்ந்து, வலம்புரி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.