சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். இந்நிலையில், இன்று (23ம் தேதி) இரவு புஷ்பரதம், நாளை (24ம் தேதி) மஞ்சள் நீராட்டு, 25ம் தேதி விளக்கு பூஜை நடக்கிறது. இதை தொடர்ந்து, 28ம் தேதி மறுபூஜை நடக்கிறது. இத்துடன் குண்டம் விழா நிறைவடைகிறது.