பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
கரூர்: கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அடுத்த நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்ட விழா, நாளை (மார்ச், 24) நடக்கிறது. முன்னதாக, சுவாமி ரதம் ஏறுதல், மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜை, பூர்வீக தானம் கொடுத்தல், தேர் நிலை பெயர்தல், திருத்தேர் உலா நடக்கிறது. வரும், 25ம் தேதி, வண்டிக்கால் பார்த்து வருதல், ஆற்றுக்கு செல்லுதல், காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. வரும், 26ம் தேதி, முப்பாட்டுக்காரை அழைத்தல், தர்மகர்த்தா காப்புகட்டி பண்டாரம் அழைத்துவிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும், விழா நாட்களில், கலை நிகழ்ச்சி, இன்னிசை நகைச்சுவை பாட்டு மன்றம், சரித்திர நாடகம் ஆகியன நடக்கிறது.