பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
திருப்பூர் : கோவில்வழி பெரும்பண்ணை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. கடந்த, 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டு நாள், 10 கால லட்சார்ச்சனை, பிரசாதம் வழங்குதல், பவுர்ணமி ஸ்ரீ சத்யநாராயண பூஜை, ஸ்ரீ மகா லட்சுமி பங்குனி உத்திர அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, விஸ்வக்சேன ஆராதனம், ஸ்ரீ மத் நாராயண ஹோமம், 108 தாமரை பூ வைத்து, மகா லட்சுமி ஹோமம், 1008 ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம சுதர்ஷன ஹோமம், மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலை, 4:00 மணி முதல்,7:00 மணி வரை, கோவில் வசந்த மண்டபத்தில், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.