நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலம் வந்தார். நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 21 முதல் நடந்து வருகிறது. பக்தர்கள் தீச்சட்டி, கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன்கள் செலுத்தி அம்மனை தரிசித்தனர்.மார்ச் 22ல் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அம்மன் நூதன பூப்பல்லக்கில் ஊர்வலம் வந்தார். கோவில் சார்பில் வக்கீல் அன்னலங்கோ குழுவினரின் கராத்தே நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை முளைப்பாரி, புஷ்ப திருவாட்சி ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டு நடக்கிறது. பெண்கள் கும்மியுடன், பொன்னூஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் சுசீந்திரன், காரியதரிசிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.