ஓமலூர்: ஓமலூர் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பட்டியில், எல்லை முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த, 22ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. இரண்டாம் கால பூஜை நேற்று அதிகாலையில் நடந்தது. 9 முதல், 10.30 மணிக்குள் எல்லை முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 12 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.